மன அமைதிக்கான பாதை
இன்னும் பேசலாம்...
இந்த தளம் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய உதவும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.
மன அமைதிச் சுரங்கத்தில், ஒரு குகையில் இந்த பயணம் - எதையும் எதிர்பார்க்காமல் - கடவுளின் பாதை.
இதுநாள் வரை என் குறிப்பேடுகளிலும், என் மன ஆழத்திலும் பதிந்த இந்த வார்த்தைகளின் தொகுப்பு இந்த தளத்துக்கு வரும் ஒவ்வொரு மனதிலும் ஒரு அமைதியை தரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் துவங்குகிறேன்.
ஆதியில் வார்த்தை இருந்தது, அது தேவனாய் இருந்தது.
சாதி, மதம் கடந்த இந்த தொகுப்பு மந்திரங்கள் நிறைந்தது, என்றாலும் இந்துத்துவம் என்ற எல்லைக் கடந்தது.
எளிய பிரார்த்தனைகள் நம்முள் நாம் செல்லவும், நம்முள்ளே ஒளிரும் ஜோதியை காணவும் உதவும் ஒரு தூண்டுகோல் மட்டுமே.
எனவே இந்த தளத்துக்கு வரும் அன்பர்கள் அனைவரும் இந்தக்
குறிப்புகளை அலட்சியம் செய்யாமல் தங்கள் மேலான கவனிப்புடன் பின்பற்றினால் மந்திர
தியானம் நிச்சயம் நமக்கு வசப்படும் என்பது மிக உறுதி
மந்திர தியானம்
மந்திரங்களை
உச்சரிப்பது உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்.
மூச்சை கவனிக்கிற
பழக்கம் மிக முக்கியமானது.
“மூச்சை
கவனி, பேச்சைக் குறை” என்ற குறிப்பை அடிக்கடி நினைவுக்கு கொண்டுவர, மூச்சை கவனிக்கிற பழக்கம்
உறுதிப்படும்.
மூச்சை உள்
இழுத்து காற்றை வெளிவிடும்போது மந்திர வார்த்தைகளை உச்சரிக்க, மந்திர சக்தியை நாம்
உணரலாம். இதுவே நம் சக்தியை நாம் உணரவும், வளர்க்கவுமான வழி.
வார்த்தைகள்தான்
தேவன், கடவுள், பரம்பொருள், அல்லா, இறைவன்.
ஆதியில் வார்த்தை
இருந்தது, அது தேவனாய் இருந்தது என்ற குறிப்பை நினைவுக் கொள்க.
மந்திரங்களை
தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்கத்தான் அதன் வீரியம் அதிகரித்து நம்முள் நிரம்பி,
பின் நம்மைச் சுற்றி பிரகாசிக்கவும் செய்யும்.
இன்னும் பேசலாம்...